மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஏப்ரல் 8) நாமக்கல், நாகப்பட்டினம், தென்காசி தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பின்னர் மதுரை வந்துள்ள ராஜ்நாத் சிங், இன்று (ஏப்ரல் 09) காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரைக்கு வருகை தந்ததை யொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.