நெல்லை பாராளுமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் ஆலங்குளம் திருநெல்வேலி பாளையங்கோட்டை நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை நிலங்களையும் உள்ளடக்கிய சிறப்பான தொகுதியாக உள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு உள்ளேயே இந்த தொகுதி அமைந்துள்ளது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்தவர். இவரது பணிகளும் சொல்லிக் கொள்ளும் படியாக ஏதுமில்லை மேலும் பற்பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் – எனவே இந்த தொகுதியினை திமுக, தனது கூட்டாளியான காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டது. ஒதுக்கி விடும்போதே தெரிந்து விட்டது தொகுதியின் நிலவரம்..
இந்த தொகுதியில் தேவர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், நாடார் ஆகிய சமூகத்தினர் எல்லா சட்டமன்ற தொகுதி ஏரியாவிலும் உள்ளனர். முற்படுத்தப்பட்ட பிராமணர் பிள்ளைமார் முதலியார் போன்ற சமூகத்தினர் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை போன்ற இடங்களில் அதிகமாக உள்ளனர் இத்தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் முழுக்க முழுக்க இஸ்லாமிய வாக்காளர்களை உள்ளனர். இந்த தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக அனைத்துக் கட்சி சார்ந்த உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால் தொகுதியை பெரிதாக யாரும் முன்னேற்றி விடவில்லை . தொகுதி மக்கள் தங்களது நெல்லையை இந்தியாவின் சிறந்த தொகுதியாக ஆக்கக்கூடிய ஒரு வேட்பாளரை தேடி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் இத்தொகுதி மக்களின் விருப்பமான வேட்பாளராக இருக்கிறார் என்று தைரியமாக சொல்லலாம். இவர் வெற்றி பெற்றால் நிச்சயம் மத்தியில் அமைச்சர் ஆவார் நமது தொகுதி முன்னேற்றத்திற்கு பாடுபடுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அனைத்து சமுதாய மக்களிடமும் நல்ல மதிப்பு உள்ளது . அவரை ஆதரிக்க அனைவரும் விரும்புகின்றனர் என்பது தொகுதியில் கள நிலவரத்திற்காக ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. இவருக்கு எதிராக நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணா திமுக வேட்பாளர் பெரிய அளவில் அறியப்படாதவர் . காங்கிரஸ் மற்றும் அண்ணா திமுக வேட்பாளர் ஆகிய இருவரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். ஒருவர் கிருத்துவர் மற்றவர் இந்து நாடார். எனவே அவர்களது போட்டி தங்களுடைய சமூக ஓட்டுகளை பெறுவதிலேயே உள்ளது.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் ஏற்கனவே அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் , மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் மக்களிடையே பழகும் பாங்கு ஆகியவை அவருக்கு மற்ற வேட்பாளர்களை விட ஒரு கூடுதல் தகுதியாக உள்ளது.. நயினார் திருநெல்வேலி தொகுதியினை முன்னேற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டு மக்களிடம் கூறி வருகிறார். தான் வெற்றி பெற்றால் இதனை எல்லாம் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றி விடுவேன் என்று வாக்களித்து வருகிறார். மத்தியில் மீண்டும் மோடி அரசே வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதால் , நம்ம தொகுதியிலும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் பற்பல முன்னேற்றத் திட்டங்கள் நமக்கு கிடைக்கும் திருநெல்வேலியின் தொழில் முன்னேற்றத்திற்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று மக்கள் நினைப்பது கள ஆய்வில் நிதர்சனமாக தெரிகிறது.
திமுகவின்மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி மற்றும் அண்ணா திமுகவில்உள்ள குழப்ப நிலை,டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியவருக்கு இந்த தொகுதியில் இருக்கும் வரவேற்பு அனைத்தும் பாஜக வேட்பாளருக்கு மிக்க பலமாக உள்ளது.
திருநெல்வேலி வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் அண்ணா திமுக வேட்பாளர்களுக்கு நிச்சயமாக அல்வா கொடுப்பார்கள். வற்றாத தாமிரபரணி ஓடும் இந்த தொகுதி தாமரை வசமாகும் என்பது உறுதி.