தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஜூம் மீட்டிங் வழியாக கலந்து கொண்டபோது திமுகவினர் ஆபாச படங்களை காண்பித்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் 400க்கும் அதிகமான தொகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கைப்பற்றும் சூழல் பிரகாசமாக உள்ளது.
இந்த நிலையில், எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் திமுக பிரதிநிதிகளை ஏன் நாம் டெல்லிக்கு அனுப்பி கொண்டிருக்க வேண்டும், இந்த முறை தேசியத்துடன் இணைவோம் என்று முடிவு செய்து தமிழக வாக்காளர்களும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னால் அணிவகுத்து நிற்க தொடங்கிவிட்டனர்.
இன்றைய தேதியில் பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே களத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. அவர்களது தொண்டர்களால் மட்டுமே வீடு, வீடாக சென்று தைரியமாக வாக்கு சேகரிக்க முடிகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்து திமுக மற்றும் அதன் பங்காளியான அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவை காப்போம் என்கிற முழக்கத்துடன் புள்ளி வைத்த இன்டி கூட்டணிக்கு ஓட்டு கேட்கும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அரசியல் வாரிசு உதயநிதி உள்ளிட்டவர்களிடம், செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்த்து கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளும் திமுக அரசு தோல்வி பயத்தில் உறைந்து போய் உள்ளது என்றால் மிகை அல்ல.
குறிப்பாக மழை, வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சென்னை மக்கள், முதலில் தமிழகத்தையே காப்பாற்ற உங்களால் முடியவில்லை எந்த அடிப்படையில் நீங்கள் இந்தியாவை காப்பாற்ற வாக்கு கேட்கிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்பது மட்டுமின்றி, திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகரத்தில் வாக்காளர்கள் இந்த முறை பாஜகவிற்கு ஓட்டு போடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். தென்சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், பால்கனகராஜ் உள்ளிட்டோருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பும், அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முறையே தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்புமே சான்று.
இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற தென்சென்னையில் பாஜக சார்பாக போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன், மக்களின் ஏகோபித்த வரவேற்புக்கிடையில் மிகவும் தீவிரமாக தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நேரடியாக சந்திக்க இயலாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் மற்றும் அவர்களது பிரச்சினையையும் அறிந்து கொண்டு தன்னால் முடிந்த தீர்வுகளை கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நேற்றைய (ஏப்ரல் 14) ஜூம் மீட்டிங்கில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளை சந்தித்தார். அந்த மீட்டிங் இன் வெற்றியை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர் ஆபாச படங்களை அனுப்பி அந்த மீட்டிங்கில் பங்கெடுத்தவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கின்றனர்.
இதனால் கோபம் அடைந்த தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து திமுகவினரே இதற்கு காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி தனது சமூக வலைத்தளம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் திமுகவினரின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தும், டாக்டர் தமிழிசை சொளந்தரராஜனுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்தும், அந்த வீடியோவை பகிர்ந்தும் பதிவு செய்தும் வருகின்றனர்.
இப்படிப்பட்ட கேவலமான மலிவான கீழ்த்தரமான அரசியலை செய்ய வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு கடுமையான எச்சரிக்கையும், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அந்த வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தேர்தலுக்கு முன்னரே தென்சென்னையில் திமுகவின் தோல்வியை உறுதி செய்திருப்பதுடன், பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் வெற்றிக்கும் அடித்தளம் இட்டிருக்கிறது என்றால் மிகை அல்ல.