முதியோர் இல்லத்தில் பேசும் போது தலைவர் அண்ணாமலை கண் கலங்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் , அண்ணாமலைக்கு ஆதரவாக ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு ஆறுதல் கூறினர்.
கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (ஏப்ரல் 17) பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான அண்ணாமலை அங்கு உள்ள நானா நானி முதியோர் இல்லத்திற்கு சென்றார். அப்போது முதியோர்களிடம் பேசிய அண்ணாமலை தன்னையும் அறியாமல் கண்கலங்கினார்.
அங்கு இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். முன்னதாக மாலை அணிவித்தும் பூரண கும்ப மரியாதை வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் பேசிய அண்ணாமலை;
தான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை எனவும் தங்களிடம் ஆசி பெற வந்து உள்ளேன் எனவும் கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார். அவரது தலையில் கை வைத்து அனைவரும் ஆசிர்வாதம் வழங்கி மலர்கள் தூவினர்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக இங்கு (முதியோர் இல்லம்) வந்து மாலை பொழுதில் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. நேற்று மிக உறுதியாக இருந்தேன். இன்று கடைசி நாள் பிரசாரத்தில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன். உங்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என உருக்கமாக பேசினார்.
இங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் , மற்றும்பணியாளர்களிடையே அண்ணாமலை கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.