ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த முழுநேர ஊழியரும், பாரதிய மஸ்தூர் சங்கமான- பி.எம்.எஸ்.,சின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான சங்கர சுப்பிரமணியன், 63, மாரடைப்பால் (ஏப்ரல் 19) காலமானார்.
1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் ஜில்லா கார்யவாஹ் ஆக சங்கப்பணி புரிந்தார். பின்னர் 1990ல் தனது வேலையை துறந்து, நாட்டுக்கு என பிரம்மச்சாரியாக வாழும் வாழ்க்கையில் தன்னை ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் முழுநேர ஊழியராக (பிரச்சாரக்காக) இணைத்துக் கொண்டார். 1990 முதல் 93 வரை சென்னை பாக் பிரச்சாரக்; 93 முதல் 97 வரை வேலூர் ஜில்லா பிரச்சாரக்; 97 முதல் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது அகில பாரத செயற்குழு உறுப்பினராக (அமைப்பு சாரா பிரிவுகள் பொறுப்பு) இருந்தார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு (ஏப்ரல் 19) காலமானார். மாலை 3:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.