தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி ஆட்சியின் ஊழல்களில் ஒன்றைக் கூட காங்கிரஸ் விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், ஊழலில் இருந்து தெலங்கானா மாநிலத்தை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுவார் என்றும் குறிப்பிட்டார். மேலும், தெலங்கானா விடுதலை தினத்தை டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கொண்டாடவில்லை என்றும் அமித்ஷா சாடினார்.