தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 26) அமைதியாக நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்கு பதிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
இரண்டாம் கட்டம் மிகவும் நன்றாக இருந்தது! இந்தியா முழுவதும் இன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் வலுவான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவை வலுப்படுத்துகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.