தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின்னர் நடக்கும் ஊழல்கள் பற்றி பேசி வந்த யூடியூபர் சவுக்கு சங்கரை பாசிச ஸ்டாலின் அரசு கைது செய்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருள் நடமாட்டத்தால் இளைஞர்கள், பள்ளி சிறுவர்கள் சீரழிந்து வருகின்றனர். குறிப்பாக போதைப் பொருள் விற்பனையை திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்ததுதான் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் குடும்பத்தினர், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் அடிக்கும் ஊழல்களை தொடர்ந்து யூடியூப் வாயிலாக சவுக்கு சங்கர் பேசி வந்தார். திமுக அரசின் அட்டூழியங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே சவுக்கு மீடியா ஒன்றை ஏற்படுத்தினார். இதனால் திமுக அரசு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் சவுக்கு சங்கர் பேசியிருந்தார். தற்போது தேர்தல் முடிந்ததால் பொய் வழக்குகளை பதிவு செய்து இன்று (மே 04) தேனியில் வைத்து அதிகாலை மூன்று மணிக்கு சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த சவுக்கு சங்கரை வேனில் கோவைக்கு அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாசிச ஸ்டாலின் அரசை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்பதற்காக இப்படி செய்தார்களா என இணையத்தில் பேசப்படுகிறது.
பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டதாக உலக பத்திரிகை சுதந்திர தினமான நேற்று (மே 03) முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் திமுக அரசை விமர்சனம் செய்த காரணத்திற்காக சவுக்கு சங்கரை ஸ்டாலின் பாசிச அரசு கைது செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் ஸ்டாலின் தற்போது சவுக்கு சங்கரை கைது செய்ய உத்தரவிட்டது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.