ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, அதிமுகவினரால் தாக்கப்பட்ட பென்னாகரம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நலம் விசாரித்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட சிட்லகாரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, அதிமுகவினரின் அராஜகத்தை தட்டிக்கேட்டார். அதற்காக அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். தாக்குதல் நடத்திய திமுக மற்றும் அதிமுகவினர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை நேற்று (மே 05) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம். அப்போது அவருடன் தருமபுரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது தொடர்பாக கே.பி.ராமலிங்கம் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நாளன்று பென்னாகரம் பாப்பாரப்பட்டியில் திமுக, அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் கிருஷ்னமூர்த்தியின் குடும்பத்தினரை ஐஸ்வரியா முருகனுடன் சென்று சந்தித்து ஆறுதல் சொன்ன அற்புதமான தருணம். கிருஷ்னமூர்த்தி போன்றதொண்டர்களின் உழைப்பால், பாஜக இன்னும் தொடர் வெற்றிகளை பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.