தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான சி.வேலாயுதம் இன்று (மே 08) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான திரு.சி.வேலாயுதம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாபெரும் பெருமையை பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து 1996ல் பெற்றவர் அவர். கட்சிக்கும், சமூகத்திற்கும் அவர் அளித்த கடமைப்பண்பும், அர்ப்பணிக்கும் குணமும் காலம் கடந்தும் நினைவேற்கப்படும்.
அன்னாரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த மற்றனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த துயரத் தருணத்தைக் கடந்தேற எல்லா வலிமையும் பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி..