இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை கடந்த 1950 ல் இருந்ததை விட தற்போது குறைந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 1950ல் 84.68% இருந்த ஹிந்துக்களின் மக்கள்தொகை, 2015ல் 78.06% ஆக குறைவு. 1950ல் 9.84% இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2015ல் 14.09% ஆக அதிகரிப்பு. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24%லிருந்து 2.36% ஆக உயர்வு. சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24%லிருந்து, 1.85%ஆகவும், பௌத்தர்களின் எண்ணிக்கை 0.05%லிருந்து 0.81%ஆகவும் உயர்வு. ஆனால், சமணர்கள் எண்ணிக்கை 0.45%லிருந்து, 0.36% ஆகவும் பார்சிக்களின் எண்ணிக்கை 0.03%லிருந்து, 0.004% ஆகவும் குறைவு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.