தமிழகத்தில் எப்போது படிக்கட்டுகள் விழுமோ, ஓட்டை விழுமோ என அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை நீடிக்கிறது என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக அரசுப் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கும்போது டயர் கழன்று ஓடுவதையும், இல்லை என்றால் பிரேக் பிடிகாமல் சாலையில் குப்புற கவிழ்ந்துக்கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இதற்கு காரணம் அரசுப் பேருந்துகளை சரியாக பராமரிக்காமல் திராவிட மாடல் அரசு ஏமாற்றி வருகிறது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது.
இந்த நிலையில், பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி அரசுப் பேருந்து நிலைமை குறித்து கூறியிருப்பதாவது:
எப்போது படிக்கட்டுகள் விழுமோ, ஓட்டை விழுமோ என பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை நீடிக்கிறது உங்களுக்கு தெரியுமா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.