ஒரிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, உண்மைக்குப் புறம்பாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஒரிசாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி அம்மாநில அரசை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களை அவமதித்துவிட்டார் என்று வழக்கம்போல தனது பொய் பரப்புரையை செய்ய தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில், இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
ஒரிசாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியதை தமிழர்களுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி, தவறாக தமிழக மக்களுக்கும், ஒரிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய்.
அதாவது பிரதமர் பேசிய பேச்சும் முதல்வர் அதற்கு கூறும் அர்த்தமும், குற்றச்சாட்டும் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது தேவையில்லாமல் ஒரு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.