பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்ளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. தேர்தல் பணியில் பொதுமக்களின் தீவிரப் பங்கேற்பு இருந்தால் தான் ஜனநாயகம் செழித்து, துடிப்புடன் காட்சியளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.