பிரபல நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் சதாபிஷேக விழா நிறைவடைந்ததை முன்னிட்டு, அவரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசிகள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக, திரையுலகில், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவரும், இளைஞர்கள் பலரின் கலை ஆர்வத்துக்கு, இன்றுவரை உறுதுணையாக இருப்பவருமான, திரு.டெல்லி கணேஷ் அவர்கள் சதாபிஷேக விழா நிறைவடைந்ததை முன்னிட்டு, அவரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசிகள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
தான் ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் மக்களின் அன்பைப் பெற்றிருக்கும் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் கலைப்பயணம், மேலும் பல்லாண்டுகள் தொடரவும், அவர் நூறாண்டுகள் புகழோடு வாழவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.