தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் இராம.நம்பி நாராயணன் மகள் டாக்டர் இரா.ந.வேதவல்லி (எ) அமிர்தா, சரண் (எ) சந்தான சேஷ கோபாலன் ஆகியோரின் திருமண விழா சென்னையில் கடந்த நவம்பர் 17ல் நடைபெற்றது.
திருமண வரவேற்பு விழா நவம்பர் 16ஆம் தேதி மாலை நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா மற்றும் முகூர்த்த தினத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், முன்னாள் ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, டால்ஃபின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி, கே.பி.ராமலிங்கம்.
தேசிய தென்னை வாரிய தலைவர் சுப நாகராஜன், பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் மாவட்ட பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் குருமூர்த்தி, மாலன், திராவிட மாயை சுப்பு, ரங்கராஜ் பாண்டே, ஜென்ராம், புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ், தமிழ் ஜனம் ஆசிரியர் தில்லை, அகில இந்திய வானொலி நிலையம் மோடியின் குரல் சுதர்சன், அந்திமழை அசோகன், உதயம் ராம், நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஒரே நாடு உதவி ஆசிரியர்கள், கட்டுரையாளர்கள், செய்தியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.