பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி மட்டுமே இருப்பதாக புதிய தலைமுறை, திமுக சார்பு ஊடகமான சன்நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது.
எல்.ஐ.சி., இணையதளம் எப்போதும் போன்று ஆங்கிலம் மட்டுமே உள்ளது. அதில் மொழித்தேர்வு என்பதை கிளிக் செய்தால் இந்தி வேண்டும் என்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தி வேண்டாம் என்பவர்கள் ஆங்கிலத்தில் வழக்கம் போல எல்.ஐ.சி.யில் உள்ள திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
ஆனால் இதனை மறைத்து புதிய தலைமுறை மற்றும் சன்நியூஸ் உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சிகள், எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி மட்டுமே இருப்பதாக இன்று காலை செய்திகளை வெளியிட்டது.
ஆனால் அவை முற்றிலும் தவறான செய்தியாகும். எல்.ஐ.சி., இணையதளம் எப்போதும் போன்று ஆங்கிலம் மட்டுமே உள்ளது. மொழித்தேர்வில் சென்றால் மட்டுமே மற்ற மொழியை தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களை தொடர்ந்து மற்ற மொழிகளை கற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கான வேலைகளை திமுக சார்பு ஊடகங்கள் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.