நீலகிரிக்கு வருகை புரிந்த ஜனாதிபதியை வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசு முறை பயணமாக ஊட்டி வருகை புரிந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளும் பயிற்சி பெறுகின்றனர். இந்த கல்லூரியில், நாளை (நவம்பர் 28) முப்படை பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க அவர் இன்று காலை கோவை விமானம் நிலையம் வந்து இறங்கினார்.

அவரை விமான நிலையத்தில் ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி புறப்பட்டார். மதியம் 12.30 மணிக்கு ஊட்டி ராஜ் பவன் வந்து சேர்ந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இன்று ராஜ் பவனில் தங்கும் ஜனாதிபதி நாளை வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளையும், பழங்குடி மக்களையும் சந்திக்கிறார். தொடர்ந்து 30ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top