வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வினாடி -வினா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: ‘‘என் இளைய நண்பர்களே, ஒரு சுவாரஸ்யமான வினாடி வினா நடைபெற உள்ளது. இது 2025 ஜனவரி 12, அன்று வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியைடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலின் ஒரு பகுதியாக அமைவதை உறுதி செய்யும். உங்களது புதுமையான யோசனைகளை அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் கேட்க இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது உங்களின் நிலையான பங்களிப்பாக இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.