வடதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்: பொதுமக்களை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, வடதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் உப்பளத் தொழிலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் தலைவர் அண்ணாமலை பேசுகையில் கூறியதாவது; வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறுகளை முறையாக தூர் வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம். நாங்கள் இங்கு வந்ததன் நோக்கம், நிலைமை எப்படி உள்ளது என்பதை தெரிவிப்பது தான். மத்திய அரசிடம் பணம் கேட்டோம், தர வில்லை என்று பழிபோடுவார்கள். பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் ஒருவாரத்தில் மத்தியக் குழுவினர் வருவார்கள். இது ஒரு நடைமுறைதான். அவர்கள் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவார்கள். அதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தொகை தரலாம். நிச்சயம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.

சாத்தனூர் அணை திறப்பின் போது, மாநில அரசு 5 முறை அலர்ட் கொடுத்து உள்ளோம் என்று கூறுகிறது. 1 மணிநேரம் முன்பு சொல்லி விட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மக்கள் எப்படி வெளியேற முடியும். 38 கிராமங்கள் மூழ்கிவிட்டன.

சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே காரணம். அரசு இயந்திரம், குறிப்பாக மாநில அரசு சரியாக செயல்படவில்லை. இந்த எச்சரிக்கை என்பது துறைகளுக்குள்ளாக மட்டுமே தெரியபடுத்தி உள்ளனர். அதிகாலை 2 மணிக்கு அறிவிப்பு தந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை.

செந்தில் பாலாஜி பெயிலில் வந்த பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. அவர்கள் எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். மக்கள் மன்றத்தில் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார். அப்போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top