ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் தங்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என, தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் தங்கம் வென்று பாரதத்திற்கு பெருமை சேர்த்த செஸ் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.