முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த தினத்தை, ஆண்டு முழுவதும் அரசின் சார்பாக கொண்டாடுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்டு முழுவதும் அரசு சார்பில் கொண்டாட தகுதியானவரா கருணாநிதி என்ற கேள்வி எழுகிறது. கட்சியின் தலைவர் என்ற முறையில், ஆண்டு முழுவதும் கட்சியினர் கொண்டாடுவதை எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அரசு செலவில் கொண்டாடும் போது பல கேள்விகள் எழுகின்றன. தமிழகத்திற்கு கருணாநிதி செய்த சாதனைகளை விட துரோக செயல்கள் தான் கண்முன் வந்து நிற்கின்றன. கருணாநிதியின் ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வானளாவ புகழ்வது வேடிக்கையாக இருக்கிறது. ஆகவே கருணாநிதியின் மறுபக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ‛‛திராவிடம் என்ற சொல் தமிழரின் நெஞ்சத்தில் பாய்ச்சப்படும் கொடிய நஞ்சு”- ‛‛திராவிடம், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு, போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்துக் கெடுக்கும் நாசக் கருத்துக்களாகும். இந்த நாசக் கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால், நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தின் பெருமையும்