---Advertisement---

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசிவிட்டு 207 பள்ளிகளை மூடிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன்

On: February 13, 2026 10:26 AM
Follow Us:
---Advertisement---

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர் என திமுக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளாசினார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தனர். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். எத்தனை வருடம் கழித்து ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்? 2021ல் அறிவித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தான் கொடுத்தனர்.

இப்போது ஊர், ஊராக என்ன செய்கிறார்கள் என்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சொந்த கட்சிக்கு (திமுக) வேலை வாங்குகின்றனர். மூத்த அதிகாரிகளை கட்சி வேலைக்கு அனுப்புவதை பார்க்கும் போது எனக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். நியமனம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளிகளில் கிடையாது. அதனால் தான் பள்ளிகள் குழந்தைகள் சேருவதே இன்று குறைந்திருக்கிறது.

2 நாட்களுக்கு முன்னர் தேசிய அளவில் ஒரு அறிக்கை வந்து இருக்கிறது. தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் கொடுத்து இருக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜகவினர் யாரும் இல்லை. அந்த மாநிலத்தில் (பீஹார்) 60 லட்சம் வாக்காளர்கள் இல்லை என்று சொல்றாங்க, 20 லட்சம் பேர் இறந்து போய்ட்டாங்க என்று சொல்றாங்க. 30 லட்சம் வாக்காளர்கள் வெளி ஊர்களில் இருக்கிறார்கள்.

ஆணவப் படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டத்தில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.

போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கஞ்சா. இன்றைக்கு விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய்க்கு கஞ்சா பிடித்துள்ளனர். காவல்துறை சரியாக செயல்படவில்லை. சின்னஞ்சிறிய கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு இருக்கிறது.

ஆட்சிக்கு வந்து எத்தனை வருடம் ஆகிவிட்டது? இப்போது வந்து தாயுமானவர் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே? இன்றைக்கு திமுகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர். அதனால் இதை எல்லாம் அவர்கள் செய்கின்றனர்.

நிச்சயம் அவர்கள் கூட்டணி 200 இடங்களில் தோற்கும். அதில் சந்தேகமே இல்லை. தோல்வி பயத்தால் எல்லா திட்டங்களையும் திமுகவினர் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நாகர்கோயில் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் கீழ் 30 சட்டசபை தொகுதிகள் வருகின்றன. திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை தவிர்த்துவிட்டு ஆகஸ்ட் 17ம் தேதி 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

இதை தொடர்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்காமல் காசோலையை சுருட்டிய திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Leave a Comment