---Advertisement---

அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

On: February 13, 2026 10:25 AM
Follow Us:
---Advertisement---

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை திமுக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி அரசு ரப்பர் தொழிற்சாலையில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 152 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மோனியா, சல்ஃபூரிக் அமிலம் போன்ற அபாயகரமான இரசாயனங்களைக் கையாளும் ரப்பர் தொழிலாளர்களுக்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தராதது மட்டுமன்றி, தங்கள் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுபவர்களை இன்று வரை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக, அத்தொழிற்சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை தற்போது பகுதிநேர ஆரம்ப சுகாதார மையமாக தரமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவர் அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அங்கே பணிக்கு வருகிறார் எனவும், அரசு நிறுவனத்தில் பணிபுரியும் தங்களின் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குமுறும் அத்தொழிலாளர்களின் பரிதாப நிலை நம்மைக் கவலையடையச் செய்கிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊழியர் மாநிலக் காப்பீட்டின் (ESIC) கீழ் அவர்களைப் பதிவு செய்வதோடு, அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

Leave a Comment