---Advertisement---

வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை

On: February 13, 2026 10:24 AM
Follow Us:
---Advertisement---

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதை தமிழக பாஜக சார்பாக வரவேற்கிறோம்.

கடந்த ஆண்டு வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இது வள்ளலாரின் பெருவெளி மெய்யியலுக்கு எதிரான செயல் என்று வள்ளலார் பக்தர்கள், தமிழக பாஜக உள்ளிட்ட பல அமைப்புகள், கண்டனங்கள் தெரிவித்ததோடு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் திரு. வினோத் ராகவேந்திரா அவர்கள் தொடர்ந்த வழக்கில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்ட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை நிலுவையில் இருக்கும்போதே, சத்திய ஞானசபைக்குச் சற்றுத் தள்ளி உள்ள பகுதியில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்டத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.

இந்த அத்துமீறலை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை கோரியும் சகோதரர் திரு. வினோத் ராகவேந்திரா அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிய கட்டுமானங்கள் எழுப்ப, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி, மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

வள்ளலார் பெருமானின் பக்தர்களுக்கு, மிகுந்த ஆறுதலாக அமைந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

திமுக அரசு, பக்தர்களை மேலும் காயப்படுத்தாமல், சர்வதேச மையக் கட்டுமானங்களை, வள்ளலார் பெருவெளியில் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்காமல் காசோலையை சுருட்டிய திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Leave a Comment