18-வது சுனாமி நினைவு தினமான இன்று தமிழக பாஜக சார்பில் சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி சுனாமியால் பாதித்த 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு புடவைகள் வழங்கினார். உடன் தமிழக பாஜக துணைத்தலைவர் கரு. நாகராஜன், மாநில செயலாளர்கள் சதிஷ் குமார், கராத்தே தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.