பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பிடத்தகுந்தது இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அடிச்சுவிட்டு ஆட்சியை பிடித்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோலுரித்து காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“திமுக தேர்தல் வாக்குறுதி எண் 185ல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் 2025-26ஆம் ஆண்டுக்கு முன்னர் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 187ல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து ஐம்பது ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தனர்.
இப்படி பல பொய்களை வாக்குறுதிகளாக வழங்கி இளைஞர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக வழக்கம் போல கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனர்.
சென்ற ஆண்டு நடத்தப்படவேண்டிய ஜிழிறிஷிசி நிக்ஷீஷீuஜீ மிக்ஷி தேர்வுகள் தாமதமாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது வழக்கமாக தேர்வு நடத்தி ஓரிரு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் ஆனால் தேர்வுகள் நடத்தி 6 மாதங்கள் ஆன பின்பும் இன்றைய தேதி வரை முடிவுகளை வெளியிடாமல் இருப்பது தேர்வெழுதியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. மேலும், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஜிழிறிஷிசி நிக்ஷீஷீuஜீ மிக்ஷி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு இன்று வரை பணிநியமன ஆணைகளை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு.
எதற்காக இந்த தாமதம் என்பதை தேர்வெழுதியவர்களுக்கு அரசு விளக்க வேண்டும். தேர்வெழுதிய 15 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேலும் காலம் கடத்தாமல், இனியும் அவர்களை ஏமாற்றாமல், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜிழிறிஷிசி நிக்ஷீஷீuஜீ மிக்ஷி தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.