முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர். ஹண்டே அவர்கள் பாஜகவில் பலரை சேர்த்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ” அஜென்டா மீடியாவிடம், கமலாலயத்திற்கு வந்தால் அசாத்திய தைரியம் வருகிறது, திமுகவிடம் கேட்க தைரியம் உண்டா? என்று பாஜக மாநிலத் தலைவர் கேள்வி எழுப்பியது மிகுந்த பரபரப்பை உருவாக்கியது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். ஹெச்.வி ஹண்டே அறிவுரையின் பேரில் 18 அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் இதர பிரிவினர் இன்று கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். அதன்பின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திப்பின் போது பேசியதாவது:-
“இங்கே பாஜகவின் துணைத்தலைவர் திரு விபி துரைசாமி உள்ளார். திரு நாராயணன் திருப்பதி உள்ளார்.
மூத்த தலைவர் டாக்டர் ஹெச் வி ஹண்டே அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவரது முயற்சியில் பல மருத்துவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். மேலும் உயர் கல்வி படித்தவர்களும், தொழில் முனைவோர்களும் கூட நமது கட்சியில் இணைந்து வருகின்றனர்.
1998 லிருந்து ஹரிஜன மக்களுக்காகப் பாடுபட்டு வரும் தலித் குடிமகன் அவர்கள் இங்கே வந்துள்ளார்.
சமூக நீதியை உண்மையிலேயே நடைமுறைப்படுத்துவது பாஜக தான் என்று அவர் நினைப்பதாலேயே இங்கு வந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் கனிமொழி அவரகள் கலந்து கொண்ட திமுக நிகழ்ச்சியில் இரண்டு திமுகவினர் ஒரு பெண் காவலரிடம் தவறான முறையில் நடந்து கொண்டனர் .உடனடியாக எப். ஐ. ஆர் பதிவு செய்யப்படவில்லை. பாஜக போராட்டத்துக்கு முனைந்த நிலையில்தான் நேற்று இரவு அந்த இரண்டு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை இது காட்டுகிறது. இரண்டு நாட்களாக எப் ஐ ஆர் போடப்படவில்லை என்றால் காவல் துறையின் மீது திமுக அமைச்சர்களின் அழுத்தம் இருந்ததா ? சம்பவம் நடந்த போது சம்மந்தப்பட்ட நபர்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதை திமுகவினர் தடுத்தனர். ஆகவே காவல் துறை கமிஷனர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் எரையூரில் தொடர்ந்து பிரச்னைகள் -இரட்டை டம்ளர் முறை; ஆலயத்தில் ஹரிஜனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது , பட்டியலின மக்களின் உபயோகத்துக்கான குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தது போன்றவை.
சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்றனர். சென்ற ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றக்கூட முடியாத நிலையைப் பார்த்தோம்.
இது முதலமைச்சரின் கவனத்துக்கு வந்துள்ளதா ?பிரச்னை நடந்த இடத்துக்கு மூத்த அமைச்சர் யாராவது அனுப்பப்பட்டுள்ளார்களா? குற்றம் புரிந்தவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
இன்று ஆர் கே நகர் திமுக எம் எல் ஏ எபினேசர் முன்னிலையில் ஒரு மாநகராட்சி ஊழியரை வலுக்கட்டாயப்படுத்தி அவரை வெறும் கைகளால் கழிவுகளைச் சுத்தம் செய்ய வைத்திருக்கின்றனர்.
எம் எல் ஏ அதை ரசித்துக் கொண்டிருக்கிறார். 1993 துப்புரவுத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் திமுக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றத்துக்கு ஓராண்டு சிறைத்தண்டனை உண்டு. ‘பெயில்’ கிடையாது. மேலும் பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே எம் எல் ஏ மீது வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
திமுக வினர் பொது வெளியில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்று உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக ஜாதி ஆதிக்கம் உள்ள கட்சி என்பது உறுதியாகும்.
திமுக முன்னாள் எம்.பி மஸ்தானின் மரணம் தொடர்பாக அவர்து காரில் உள்ள ரத்தக் கறை போன்றவற்றின்
போட்டோவை அவர் வசித்த குடியிருப்பில் வசிப்பவர்கள் எனக்கு அனுப்பினார். அதை நான் ஓர் உயர் காவல்துறை அதிகாரிக்கு அனுப்பி விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். இல்லையென்றால் நாங்கள் களத்தில் குதிப்போம் என்று கூறினேன். ஒரு திமுக முன்னாள் எம்.பி க்கே இந்த நிலை அவரது மனைவி போராடித்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ராகுல் காந்தி இப்பொது ‘பாரத் ஜோடோ ‘ (பாரதத்தை ஒற்றுமைப்படுத்துவோம்) என்ற பெயரில் நடைப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அது ‘பாரத் தோடா ( பாரதத்தைப் பிளவு படுத்துவோம்) ஆகத்தான் உள்ளது. தற்போது அவருடன் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ (உளவுத்துறை )யுடன் இணைந்து ஒரு புத்தகம் எழுதிய ‘ரா’ (உளவுத் துறை) அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருக்கிறார் . அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. துல்லியத்தாக்குதல் தொடர்பாக நம் நாட்டின் மீதே குற்றம் சாட்டியவர் அவர்.
இப்பொது ராகுல் காந்தி காஷ்மீருக்குள் நுழையப்போகிறார். அவருடன் உமர் அப்துல்லா இணைந்து நடைப்பயணம் செல்லப்போவதாகச் செய்தி வந்துள்ளது. முன்பு 1953 ஆகஸ்டு எட்டாம் தேதி ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தா நேரு உமர் அப்துல்லாவின் தாத்தாவான ஷேக் அப்துல்லாவை தேசத்துரோக வழக்கில் கைது செய்து கொடைக்கானலில் காவலில் வைத்தார். இந்த லட்சணத்தில் பாஜக மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இது எந்த அளவுக்கு கேலிக் கூத்தாக உள்ளது? இதைத் தமிழக மக்கள் உணர வேண்டும்” என்றார்
தனது கருத்துக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரங்கள் சுருக்கமாக இங்கே:
பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கட்சியிலிருந்து வெளியேறியவர் கூறியது குறித்து~ -லட்சக்கணக்கான மகளிர் உள்ளனர். என் மீது குற்றச் சாட்டு வைக்காதவர்கள் யாருமில்லை.
நக்கீரன், ஜூனியர் விகடன், முரசொலி போன்றவை. மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் முடிவு செய்வர். என் பதில் மௌனம் மட்டுமே..
ஈஷா யோகா மையம் குறித்த குற்றச் சாட்டுகளைப் பொறுத்தவரை முத்தரசன் திமுகவுடன் கூட்டணியில் உள்ளார். அது ஆட்சியில் உள்ளது. ஆகவே முத்தரசன் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கட்டும்.
முத்தரசன் பிஜேபி அது இது என்று சொல்லாமல் ரயில் ஏறிச் சென்று கோயம்புத்தூரில் எப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும். ஆகவே எங்கள் காதில் பூ சுற்ற வேண்டாம்.
தொடர்ந்து உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த புதிய தலைமுறை நிருபரிடம் கடும் கண்டனம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் அந்நிருபரிடம் : பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆவணங்களை நீங்கள் உங்களது புதிய தலைமுறையில் போட வேண்டும். போடுவீர்களா ? என்னோடு அறைக்கு வாருங்கள் ஆவணங்களைக் காட்டுகிறேன் அரை மணி நிகழ்ச்சி புதிய தலைமுறையில் போட வேண்டும் நான் பத்திரிகையாளர் சந்திப்பில் கொடுத்தேன் போட்டீர்களா?. பந்தயம் வைத்துக் கொள்ளாலாம்.
முதலைமைச்சர் டீ குடித்தார், சைக்கிளில் போனார் ,குட்டிக்கரணம் போட்டார் என்று போடுகிறீர்கள்.
அரை மணி அரை மணி சிறப்பு ஷோ போடுங்கள். தொடர்ந்து காட்டுங்கள்.
யார் வேண்டுமானாலும் அவதூறு சொல்லிக் கொண்டிருப்பார்கள்
அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஒரு மனிதர் எங்கள் கட்சியைப் பற்றிப் பேசுவதைக் கேட்கிறீர்கள் ஒரு பெண் போலீஸ் இடுப்பை ஒரு திமுகக்காரன் கிள்ளியது குறித்து மூத்த அமைச்சரிடம் கேட்டீர்களா காவல் துறை அதிகாரியிடம் கேட்டீர்களா . கேட்டேன் என்பதை நிரூபியுங்கள் . உங்களுக்கு ஒரு உள் நோக்கம் உள்ளது என்று கூறினார். ( காரசாரமான இந்த விவகாரம் பல காணொளி ஊடகங்களில் ஒளிபரப்பாகி வைரலாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது).
அவரது சான்றிதழை வைத்து அண்ணாமலைக்கு ஒன்றும் ஆக வேண்டுமென்பதில்லை அதை பிரேம் போட்டு வீட்டில் மாட்டப் போகிறேனா?
ஈஷா யோக மையம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்பது குறித்து ~ உங்களது கேள்வி அபத்தமாக உள்ளது. காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? மஸ்தான் விஷயத்தில் அது கொலை என்று காவல்துறை கூறியது. ஆனால் ஈஷா விஷயத்தில் நடந்தது கொலை என்று புதிய தலைமுறை நிருபரான நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? உங்களுக்கு அது பற்றித் தெரியுமா?
அதிகக் கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.நமது மக்கள் மீது 2,63,000 கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. .தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. 99.5% மக்களிடம் ஆதார் அட்டை உள்ளது. ஆகவே மக்கள் அடையாள அட்டை எதற்கு? ஆதார் செய்யாததை ‘மக்கள் ஐ டி’ ( மிஞி) என்ன செய்யப்போகிறது? மக்கள் கடனைப் பற்றி பேசக் கூடாது. ஒரு தனி குடும்பத்தின் மீது 263000 கோடி ரூபாய் சுமை உள்ளது என்பதை மறைக்கவே இதெல்லாம்.
பத்திரிகை சந்திப்பில் கேட்கப்படும் கேள்விகள் உப்பு சப்பில்லாமல் உள்ளன . வேறு எங்கும் இல்லாத வகையில் அண்ணாமலை என்ன சாப்பிட்டான், அண்ணாமைலையைப் பார்க்க யாரைப் பிடிக்க வேண்டும் இதெல்லாம்தான் பிரச்னை .பெண்களின் இடுப்பை திமுகக்காரன் பிடித்தாலோ ,தமிழ் நாட்டின் கடன் சுமை பற்றியோ இவர்களுக்கு பிரச்னை இல்லை.
பாஜக ஒரு டீக்கடை அல்ல.. ரெண்டு பேர் வந்து ஓசி டீ குடித்து பேப்பர் படித்து விட்டு ,பேசி விட்டுப் போவதல்ல.
கருணாநிதியின் 1967 கதையைச் சொல்லவா ?யார் உள்ளே வந்தார்? யார் வெளியே போனார்? என்பதைப் பற்றியெல்லாம். பாஜக ஒரு குடும்பக் கட்சி அல்ல. இது ஜனநாயகக் கட்சி .வளரும் கட்சி. பத்தாயிரம் பிரச்னை இருக்கும்.
ஸ்டாலின் ,கே சி ஆர் உட்கார்ந்து கொண்டு முடிவு செய்கிறார்கள்.
அடிமைகள் கட்சியில்தான் பத்து பேர் உட்கார்ந்து ‘நீதான் என் தலைவன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பான் காரில் விழுந்து டயரில் விழுந்து வீட்டு வாசலில் விழுந்து எனக்குப் பிறகு மகன் .பேரன் அவனது மகன் என்று போஸ்டர் போட்டு…என்று இருப்பதல்ல பாஜக.
நீங்கள் வரும்போதே ஒரு உள்நோக்கத்துடன் வருகின்றீர்கள் பிசிசிஐ (ஙிசிசிமி)- இந்திய கிரிக்கெட் வாரியம்- செயலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதையும் அரசியலையும் எவ்வாறு ஓப்பிட முடியும்?பொன்முடி மகன் டி என் சி ஏ ( தமிழ் நாடு கிரிக்கெட் அசோஸியேசன்) )தலைவராக உள்ளார்? அதை நீங்கள் கேள்வி கேட்டீர்களா?
தமிழகத்தில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
அவர் இதுவரை அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை உண்மையா வதந்தியா தெரியாது.
தமிழ் நாட்டில் டி. ஐ. பி. ஆர்( ஞிமிறிஸி) – மக்கள் தொடர்பு இயக்குனரகம் – என்ற அமைப்பு உள்ளது. பிரஸ் மீட்டில் ஏழு நிமிடத்துக்கு மேல் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த அமைப்பின் தலைவர் அந்த டீவீ சானலைக் கேள்வி கேட்பார். இதேதான் பத்திரிகைக்கும்.
சென்ற ஆண்டு டி ஐ பி ஆர் மூலம் ஒரு ஒரு டீவீ சானலுக்கு 6 கோடி . மற்றொன்றுக்கு 31 லட்சம் ஒரு செய்தித்தாளுக்கு 8 கோடி இன்னொரு செய்தித்தாளுக்கு 44 லட்சம். தினகரன் பத்திரிகையின் சந்தா எண்ணிக்கை என்ன ? ஆனால் டிஐபிஆர் லிருந்து எவ்வளவு தொகை வாங்குகிறது?.
முரசொலி எவ்வளவு வாங்குகிறது என்று பாருங்கள்.
இங்கு வந்தவர்களில் யாரெல்லாம் மிக அதிகமாக் கேள்வி கேட்கிறீர்களோ அவர்களது நிறுவனங்களுக்கு டிஐபிஆர் லிருந்து மிக அதிகத் தொகை வந்துள்ளது என்று பொருள்.
ஒன்றும் வேண்டாம்.20~20-21, 21-~22 க்கு தமிழ் நாடு அரசு உங்களது நிறுவனங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கியுள்ளார்கள் என்று பாருங்கள்.
நான் ஆதாரம் தருகிறேன் புதிய தலைமுறையில் போட வேண்டும்..
பாமக ~ அதிமுக மோதல் குறித்து:
என்ன மோதல்? சட்ட சபையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்தது போல் வந்தார்களா?அதிமுக, பாஜக ,பாமக அனைத்துக் கட்சிகளுமே வளர வேண்டும் என்று நினைக்கின்றன அதில் தவறில்லை இன்று அமைச்சகராக உள்ள திமுக அமைச்சரின் மீது ஒரு பாலியல் குற்றச் சாட்டு உள்ளது. டேப் வந்தது.இரண்டு நாட்கள் ஓடியது .
நீங்கள் யாரும் போடவில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம் . மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? அதை நீங்கள் போடுவீர்களா?
‘பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்’ என்று சொன்னது யார்? . ஒரு தலைவியின் முடியைப் பிடித்து இழுத்தது யார் ? சேலையை இழுத்தது யார்? இதையெல்லாம் நீங்கள் போடுவீர்களா? போட்டால் உங்கள் நிறுவனம் இருக்குமா? தமிழ் நாடு அரசு கேபிளில் கடைசி இடத்துக்குப் போவீர்கள்
டிஐ பிஆர் லிருந்து 20 லட்சம் தான் வரும்.
கட்சியில் யாரோ சொன்னார் என்று வந்து விடுகிறீர்கள் .திமுகவிடம் கேட்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? கமலாலயத்துக்குள் வந்தால் மட்டும் அசாத்திய தைரியம் வருகிறது !
எனது ரபேல் வாட்சில் ஒட்டுக் கேட்கும் கருவி உள்ளதா என்று கேட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நிருபரே இதை உங்களிடம் தருகிறேன் .நீங்கள் போய் கழட்டிப் பார்த்து ஓட்டுக் கேட்கும் கருவி உள்ளதா என்று பாருங்கள்.
உள்நோக்கத்துடன் கேள்வி கேட்ட ஒரு யுடியூப் நிருபரிடம் : ஒரு 40,000 ரூபாய் கேமரா வாங்கிக் கொண்டு யு ட்யூப் வீடியோ போட்டு ஊடகம் என்று வருகிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்க என்ன அதிகாரம் உள்ளது? ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது பிரஸ் கவுன்சில் உள்ளது. உங்களுக்கு அது இல்லை. பிரதான ஊடகங்கள் உங்கள் வருகையை விரும்பவில்லை. பாருங்கள் புதிய தலைமுறையே விரும்பவில்லை ! எனக் கூறி அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவுசெய்தார்.
ஙிக்ஷீமீணீளீவீஸீரீ ழிமீஷ்s
இன்றைய பத்திரிகையாளர் ஞிமிறிஸி மீடியாக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அதன் சந்தாதார் எண்ணிக்கைக்கும் வாசகர்எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லாத வகையில் அதிக அளவில் பணம் அனுப்பிய ஆதாரத்தை வெளியிடுவேன்னு அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் டி.ஐ.பி.ஆர் பக்கமும் டிவிட்டர் பக்கமும் முடக்கப் பட்டதாக தகவல்கள் வருகின்றன. மூச்சுத் திணறலில் திராவிட மாடல் அரசு!
தொகுப்பு – இரா.ஸ்ரீதரன்