கர்நாடக மாநிலம் விஜயபுராவின் ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள்நினைவு கூரப்படுவார். மற்றவர்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபட்டார்.
செறிவான ஞானத்திற்காக அவர் போற்றப்பட்டார். சோகமான இந்த தருணத்தில் அவரின் எண்ணற்ற பக்தர்களுடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. ஓம் சாந்தி” என இரங்கலை பதிவிட்டுள்ளார்.