தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (04.01.23) அஜென்டா மீடியாக்களை வறுத்தெடுத்த நிலையில், புதிய தலைமுறையின் நிருபர் ஒருவர் வான்டெட் ஆக வந்து ஆதாரம் கேட்க, அதற்கு அண்ணாமலை பி.ஜி. ஆர் முறைகேடு குறித்த தரவுகளை தருவதாகவும், அதனை புதிய தலைமுறை நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடியுமா என்றும் பந்தயம் வைத்தார்.
சவாலை ஏற்றுக் கொண்ட புதிய தலைமுறை நிருபர், ஆனால் அண்ணாமலைதான் நேரில் வர வேண்டும்
என்று கண்டிசன் போட, அண்ணாமலை அவர்களுக்குத் தேவை முறைகேட்டு ஆதாரங்கள்தானே தவிர யார் என்பதல்ல என்று கண்டித்து, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்றும் மக்கள் முன் பி.ஜி. ஆர் குறித்த விஷயங்களை பாஜக எடுத்து வைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஒரு வழியாக அதற்கு புதிய தலைமுறை நிருபரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று நடைபெற இருந்த புதிய தலைமுறை தொலைக்கட்சி நிகழ்ச்சி அறிவாலயத்திற்கு அஞ்சி, அடிபணிந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;
“நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை என்னை பணித்திருந்தார். இன்று மாலை 7 மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார். ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன்.
ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.
பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்
புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும்,
புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை. எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம். புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால்
இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.