பபாசி சார்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம்
ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை முதல் ஜனவரி 22 வரை நடைபெறவுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும்
சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 46-ஆவது சென்னை சர்வதேச
புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஜன. 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவு
கட்டணமாக வசூலிக்கப்படும்.
கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக 200 சேர்த்து மொத்தம் 1,000
அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அதில் குழந்தைகளுக்கான சிறார் நூல்களுக்கு பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.