கவர்னரை பார்க்கின்ற பொழுது கைகட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து, கூழை கும்பிடு போட்ட டி ஆர் பாலு.. இப்போது கவர்னரை எச்சரித்து இருப்பது
தன் எஜமான விசுவாசத்தை காண்பிப்பதற்காகத்தான் என்று எஸ் ஆர் சேகர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், செட் “கவர்னரை பற்றிய இவரது குற்றச்சாட்டுகள் வினோதமாக இருக்கிறது சனாதனம் பேசுகிறாராம். ஆரியம் திராவிடம் உரைக்கிறாராம். திருக்குறள் புகழ் பாடுகிறாராம்…காலனி ஆதிக்கத்தை குறை சொல்லுகிறாராம்.
அண்ணன் டி ஆர் பாலு அவர்களே இவையெல்லாம் தேச விரோதமா? அல்லது திமுகவுக்கு மட்டுமே பட்டயம் எழுதிக் கொடுத்த விஷயங்களா?
திருக்குறளை புகழ் பாடுவதை எரிச்சலோடு பார்க்கின்ற ஒரே மனிதர் நீங்களாக மட்டுமே இருக்க முடியும்.
புதுக்கோட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மற்றும் தமிழகத்தில் 22 மாவட்டம் 262 ஊர்களில் இன்னும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதே… இதுதான் திராவிட மாடலா ?
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு தந்த கழக கண்மணிகளை கைது செய்யாமல் பாதுகாக்கிறீர்களே இதுதான் திராவிட மாடலா ? இதற்கு பதில் சொல்ல முடியாததால் கவர்னர் மீது பாய்கிறீர்கள்..
எப்போதுமே கழகம் தன் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திசைதிருப்பும் ஒரு வழி தான் “கவர்னர் மீது பாய்ச்சல்”
இப்போது புரிகிறதா பாலு ஏன் கவர்னர் மீது பாய்கிறார்” என்று காட்டமாக கூறியுள்ளார்.