பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் கடந்த 05.01.23 அன்று சென்னையில் தமிழ்த் தாய்
விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பா.ஜ.க. தலைவருக்கு
மேடையில் வைத்த பணிவான வேண்டுகோள் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பெரிதும்
பரப்பப்பட்டு வருகிறது.
சிறந்த சிந்தனைகளை குறும்படமாக வெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய்
விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரை உலக ஜாம்பவான்கள், நடிகைகள்
மற்றும் பாடகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரும், கலை கலாச்சார பிரிவு
தலைவருமான பெப்ஸி சிவா தலைமை தாங்கினார். இந்த விழாவில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து
கொண்டார்.
இதையடுத்து, திரைத்துறையில் சாதனை படைத்தவர்கள் மற்றும் குறும்படம் எடுத்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை கஸ்தூரி பேசும் போது ;
ஒரே ஒரு விஷயம் நான் பொதுவாக கூற விரும்புகிறேன். தலை குனியலாம் ஆனால் மலை குனியலாமா? கரடியோடு
கூட சண்டை போட்டு விடலாம். ஆனால், ”கத்துக்குட்டிகளுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சண்டை
போடலாமா ? என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.