மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக நிதியமைச் சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் அவரது அலுவலகத்தில் தமிழக
பாஜக துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2023-~24-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதை முன்னிட்டு, தமிழக பாஜகவின் கருத்துகள், விவசாயம், குறு, சிறு, நடுத்தர
தொழில்கள், ஜவுளி, சேவைத் துறையினர் உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் இந்தத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களின்
பல்வேறு பரிந்துரைகள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பாஜக துணைத் தலைவர்
பேராசிரியர் கனகசபாபதி கோரிக்கைகளை அளித்தார்.
தில்லி நார்த் பிளாக்கில் உள்ள மத்திய நிதியமைச்சர் அலுவலகத் தில் நிதி நிலை அறிக்கை தொடர்பான இந்த
கோரிக்கைகளை அளித்த போது, அமைச்சர் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டதாகவும், தமிழகத்தின்
வளர்ச்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், நிதி அமைச்சரும் அக்கறை கொண்டுள்ளது தமிழகத்துக்கு
கிடைத்த அரிய வாய்ப்பு என்றும் பேராசிரியர் கனகசபாபதி தெரிவித்தார்.