உள்நோக்கத்தோடு பயன்படுத்தப்படும் ஒன்றிய அரசு என்ற சொல் – ஆர். என். ரவி !

ஒன்றிய அரசு என்பது தவறில்லை. ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யும் போதுதான் பிரச்னை ஆகிறது என்று
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி
கூறியுள்ளார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதையும் மாநிலத்தை தமிழகம் என்று அழைப்பதை தவிர்த்து தமிழ்நாடு
என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்ற ஆளும் கட்சியின் நிலையையும் உள்நோக்கம் கொண்டவை என்று
தொடர்ந்து ஆளுநர் சுட்டிக் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 80 மாணவர்கள் பங்கேற்ற எண்ணித்
துணிக என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகிவருவோர் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.
ரவி, இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. எந்த மொழியும் கற்பது தவறில்லை. அது அந்த
மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக் கொள்வது
பயன்படும் என்று கூறினார்.
மேலும், நேர்முகத் தேர்வு என்பது மனத்திடத்தை சோதிக்கும் தேர்வு என்பதால், நீங்கள் திடமாகவும் எனர்ஜியாகவும்
இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள். சிரித்த முகத்துடன் சிக்கல்களை
எதிர்கொள்ள வேண்டும்.
கேள்விகளுக்கு அவசரமாக பதிலளிக்க வேண்டாம். நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள், நீங்கள்தான். நீங்கள்
மற்றவர்கள் அல்ல. பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். அதை சங்கடமாகக் கருத
வேண்டாம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top