ஜனவரி 1,2023 முதல் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்ப பயனாளிகள் திட்டத்திற்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கு புதிய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
புதிய திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும்மேற்பட்ட ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் இந்திய உணவுக்கழக அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் வழக்கமாக விவாதித்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்காக 2023-ல் மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.