கம்யூனியிஷம் உலக அளவில் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ரஷ்யாவில் போர், சீனாவில் பொருளாதார
நெருக்கடி என இரு வல்லரசு நாடுகளும் கம்யூனிசத்தால் சின்னாபின்னமாகி வருகிறது. இந்தியாவிலும் தேவையே
இல்லாத இந்த கம்யூனிச சித்தாந்தம் மேற்கு வங்கத்தையும், கேரளத்தையும் சீரழித்து உள்ளது.
பலவருடங்களுக்கு முன்பு ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு கேரளாவும் மேற்கு வங்காளம் போல் ஆகும் என்று சொன்னார்.
அப்போது யாரும் நம்பவில்லை. இப்போது நம்பிவிட்டார்கள். அதற்கு உதாரணம் இதோ இந்த விளம்பரம். கட்சி
அலுவலகம் வாடகைக்கு என்று மேற்கு வங்காளம் போல் கேரளாவிலும் போர்டு மாட்டிவிட்டார்கள்.
கொள்கையை பரப்ப முடியாமல், இருக்கின்ற கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விட்டு காசு பார்க்கும் நிலைக்கு கேரள
கம்யூனிசம் சென்றிருப்பதுதான் கம்யூனிசத்தின் நிலை.