தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை, கண்ணியம், கட்டுபாட்டுக்கு தட்டுப்பாடு உள்ள இயக்கமான திராவிட மாடல்
இயக்கத்தின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது ஆளுநர் மாளிகை சார்பில்
உரிய நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர். என். ரவி உரை நிகழ்த்திய போது, திமுக தூண்டுதலின் பேரில் திமுகவின் கூட்டணி
கட்சியினர் ஆளுநர் முன் கூச்சலிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தினர். மேலும், திமுக எழுத்திக் கொடுத்தவற்றை ஆளுநர்
அப்படியே படிக்கவேண்டும் என்று திமுக நிர்பந்திக்க, அதனைத் தவிர்த்து ஆளுநர் கூட்டத்தின் இடையே கெத்தாக
வெளியேறினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தி.மு.க.வின் மூன்றாம் தர பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பேசியதாவது “கவர்னர் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி
படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம். ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக்
கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் கவர்னரை செருப்பால்
அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை சொல்லி தானே பதவி ஏற்றார். இடையிடையே
அவர் பேசிய சில வார்த்தைகளை அச்சேற்ற முடியாது. அந்த அளவு அநாகரிகமான வார்த்தைகளை திராவிட மாடல்
பேச்சாளர் பயன்படுத்தியுள்ளார்.
இதையடுத்து ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார்
அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆளுநர் ஆர். என் ரவி குறித்து தி.மு.க., பேச்சாளர் தகாத
வார்த்தைகளை பேசியுள்ளார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் அவர் மீது
இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870ன் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்
கூறியுள்ளார்.