“இன்றைய தேதியில் ராமர் பாலத்தை பாதிக்காத வாகையில் சேது சமுத்திர திட்டம் இருந்தால் மட்டுமே நம் ஆதரவு”
என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத
அவரிடம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மாநில அரசு மத்திய
அரசோடு இணைந்து அந்த “4 ஏ” அலைன்மென்டைத் தாண்டி, புதிதாக ஒரு அலைன்மென்ட் ராமர்சேது பாலத்தை
எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் கொண்டு வந்தால் மட்டும்தான் அந்த திட்டத்திற்கு தமிழக பாஜக ஆதரவளிக்கும்.
இதனால்தான், பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
ராம் சேதுவிற்கு பாதிப்பு வராமல் இது
இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், 2018 மார்ச் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இந்த “அலைன்மென்ட் 4 ஏ” குறித்து தெரிவித்துள்ளது.
இன்றைய தேதியில் முதல்வர் கூறுகின்ற திட்டம் “அலைன்மென்ட் 4 ஏ” என்று தெளிவுபடுத்தினால், பாஜக அதனை எதிர்க்கிறது. “4 ஏ” இல்லை. மத்திய அரசோடு இணைந்து புதிதாக ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதாகக் கூறினால், அதை பாஜக ஆதரிக்கும்” என்றார். மேலும் பேசிய அவர், இந்தத் திட்டத்தால் தமிழக மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு எவ்வித பயனுமில்லை. உச்சநீதிமன்றம் ஆர். கே பச்சௌரி தலைமையில் அமைத்த குழுவும் சேது சமுத்திர திட்டத்தால் தமிழகத்துக்கு பலனில்லை என்றே தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல், மத்திய அரசோடு இணைந்து புதிய வழியில் சேது சமுத்திர திட்டத்தை உருவாக்க திமுக அரசு முன்வந்தால், அதை பாஜக ஆதரிக்கும்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.