இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலரும், ராஜஸ்தான் அரசின் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் மாயாராமுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இங்கிலாந்தை சேர்ந்த டிலரு என்ற நிறுவனத்துடன் ரூபாய்க்கான பாதுகாப்பு இழைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2010ம் ஆண்டு வரை அனைத்தும் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தன.
2010ம் ஆண்டில் டிலரு நிறுவனம் பாகிஸ்தானுக்கும் ரூபாய் நோட்டுக்கான தாள்கள் மற்றும் மற்ற மூலப் பொருட்களை விநியோகிப்பதை இந்தியாவின் உளவுத்துறை கண்டுபிடித்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு இதனை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் கள்ள நோட்டுக்களை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டதையும் கண்டுபிடித்தது.
நல்லவேளையாக அப்போது நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அவர் உடனடியாக டிலரு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தார். ஆனால் 2012ம் ஆண்டு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்ற ப.சிதம்பரம்,டிலரு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்தார். இந்த தடையை விலக்கப்பட்ட போது பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக அரவிந்த் மாயாராம் இருந்தார். எனவே ப.சிதம்பரத்துடன் அரவிந்த் மாயாராம் கூட்டு சேர்ந்து தான் இந்த சதிவேலையில் ஈடுபட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
2004ம் ஆண்டு பச்சை,நீல நிறத்தினாலான பாதுகாப்பு இழைகளை உருவாக்கிய டிலரு நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. ஆனால் 2009ம் ஆண்டு இந்நிறுவனத்தின் விண்ணப்பம் பதிப்பிடப்பட்டதுடன், 2011ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு இடையே பாகிஸ்தான் உளவு அமைப்புகள் கோடிக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டன. இந்த ரூபாய் நோட்டுக்களை நக்சல்கள், மத பயங்கரவாதிகள் இந்தியாவில் புழக்கத்தில் விட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றனர்.
இதனை வெளியே கொண்டு வந்ததற்காக கர்னல் ரோகித் என்பவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு அவர் சித்திரவதை செய்யப்பட்டார்.கமிஷனுக்காகவோஅல்லது வேறு நோக்கத்திற்காகவோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதில் நேரடியாகவே ஈடுபட்டது. இவ்வாறூ அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை பயன்படுத்தி தான், 2011ஆம் ஆண்டு கொடூரமான மும்பை தாக்குதல் நடைபெற்றது
பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்தவுடன் இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்ட போலி நோட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக சிதம்பரம் அழுவது இந்திய பொருளாதாரத்தை நினைத்து அல்ல என்றும் அவருடைய பொருளாதாரம் மற்றும் காங்கிரஸ் அரச குடும்பத்தின் பொருளாதாரம் சீரழிந்ததை நினைத்து தான் என்பதும் தெளிவாகியுள்ளது.
அவருடைய பொருளாதாரம், கோதுமை மாவுக்கே குஸ்தி சண்டைபோடும் பாகிஸ்தானின் பொருளாதாரம்
மற்றும் இவரது அபகரிப்பில் பங்கு தந்த ,காங்கிரஸ் அரச குடும்பத்தின் பொருளாதாரம் சீரழிந்ததை நினைத்து தான் என்பதும் தெளிவாகியுள்ளது.