வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையான மாட்டுப் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல திருவள்ளுவர் தினத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். வாழ்வியலை மையமாக வைத்து மக்களுக்கு தேவையானது மற்றும் தேவையற்றதை தெளிவாக சொல்லும் உலகப் பொதுமறை திருக்குறளை தந்தவர் திருவள்ளுவர் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.
திருவள்ளுவரை போற்றுவோம் எனவும் கொண்டாடி மகிழ்வோம் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார். மேலும் தனது வாழ்த்து செய்தியில் காவி உடை, நெற்றியில் பட்டை அணிந்த திருவள்ளுவர் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். திமுக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்களால் அடையாளப்படுத்தப்படும் திருவள்ளுவர் உருவப்படத்தில் வெள்ளை நிற ஆடை உடுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை மாற்றி காவி நிற ஆடையுடன் கூடிய திருவள்ளுவர் உருவப்படத்தை அண்ணாமலை பகிர்ந்துள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.