உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நி்யமிக்கும் கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமித்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய
வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொலிஜீயம் அமைப்பு நியமித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிமன்ற கொலிஜியம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை, உயர்நீதிமன்ற கொலிஜீயம் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்து வருகிறது.இந்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளும், உயர்நீதிமன்ற கொலிஜியத்தில் மாநில அரசின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட வேண்டுமென கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய கொலிஜியத்தில் அரசுப் பிரதிநிதிகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற பார் ஆசோசியேசன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட்,கொலிஜியம் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொள்வதாக தெரிவித்திருந்தார். மேலும் அதனை சரிசெய்ய மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கடிதத்தை அவர் ஏற்றுக் கொள்வார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.