தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் திமுக கைவசம் வைத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ். அண்மைக்காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இதனிடையே மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அண்மையில் ஆளுநரின் பேச்சை திரித்து கூறி புது பிரச்சனையை கிளப்பியிருந்தது.இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை ஆளுநர் பயன்படுத்தியதாக விளக்கம் அளித்துள்ளது.
தனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது என்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் விளக்க அறிக்கையில் கூறியுள்ளது.
தனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயர் விவாதப் பொருளாகி இருப்பதாகவும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது.