ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; தொகுதியை பிடுங்க திமுக திட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறூம் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மீண்டும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியே அங்கு களமிறங்குமா இல்லையா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

அதே சமயத்தில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரசிடம் இருந்து தொகுதியை பிடுங்க ஈரோடு மாவட்டத்தை சார்ந்த திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும், திமுக போட்டியிட்டாலும் வெற்றி பெற வைப்போம் என அவர் கூறியுள்ளார்.இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுகளை அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top