கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் நேற்று (17.01.23) இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது; “கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் அவர்கள் இறைனவடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது சமூக, சமுதாய, கல்விப் பணிகள் என்றும் போற்றுதலுக்குரியது.அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என அவர் இரங்கலை பதிவிட்டுள்ளார்.