ஆளுநர் மாளிகையில் நேற்று (17.01.23) திருவள்ளுவர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை ஆளுநர் செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று ஜி20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை” என கூறப்பட்டுள்ளது.