மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் !

உலக நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கரோனா சிகிச்சைக்குத் தேவையானது உள்பட அனைத்து வகை மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் இருந்தபடி காணொளி வழியில் மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த வலியுறுத்தலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

சீனா, தென் கொரியா உள்பட மேலும் சில உலக நாடுகளில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டில். மருந்துகள் இருப்பை. உறுதிப்படுத்தும் வகையில், மருந்து நிறுவன பிரதிநிதிகளுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

மருந்துகளின் கையிருப்பு மத்திய அரசு அறிவுறுத்தல் !

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் நடத்தினார். அதில், உலக அளவில் கரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து மருந்து நிறுவன பிரதிநிதிகளுக்கு அமைச்சர் விவரித்தார்.

அப்போது, ‘இந்திய மருந்து உறுபத்தி நிறுவனங்கள் வலுவான நிலையிலும், சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையிலும் மீள்தன்மையுடையவையாகவும் உள்ளன. அதன் காரணமாகவே, கரோனா பாதிப்பின்போது உள்நாட்டு மருந்து தேவையை பூர்த்தி செய்ததோடு, 150 நாடுகளுக்கும் மருந்துகளை இந்தியாவால் விநியோகிக்க முடிந்தது. மருந்துகளின் விலையை உயர்த்தாமலும், தரத்தைக் குறைக்காமலும் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது’ என்று அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், ‘உலக அளவிலான மருந்து விநியோகச் சங்கிலி நிலவரத்தை மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்பதோடு, கரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்குத் தேவையான மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளின் இருப்பையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.

அப்போது, ‘கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் விநியோகச் சங்கிலியை தங்களால் திறம்பட நிர்வகிக்க முடியும்’ என மருந்து நிறுவனங்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top