ஆளுநர் ஆர்.என் ரவியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலாளர் சென்னை முதர்வு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அண்மையில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என் ரவியை ஒருமையிலும்,தரக்குறைவான வார்த்தைகளிலும் விமர்சித்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் ஏற்கனவே, சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக புகாரளிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டி வந்தது.
இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயலாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வசமாக சிக்கியுள்ளார். கட்சியும் கைவிட்ட நிலையில் நாளுக்கு நாள் பிடி இறுகுவதால் செய்வதறியாது திகைத்து வருகிறார்.
அவதூறு பேச்சுக்கு புகழ்பெற்ற ஆர்.எஸ் பாரதியே, பதவி ஒன்றும் கிடைக்காத விரக்தியில் சுற்றி வருகிறார். இந்த நிலையில் அவருடன் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் இணைந்துள்ளார். மேடையில் பேசிய அந்த வாய்கொழுப்பு வீரன் நீதிமன்றத்தில் எப்படி மன்னிப்பு கேட்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் …