கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஆராய்ச்சி அறிவியல் மையத்தில் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின்,
ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தினங்களுக்கு 2
காப்புரிமை என வேகமெடுத்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில் 2001 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் சுமார் 3147 காப்புரிமை விண்ணப்பங்கள்
இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதில் குறிப்பாக ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2022
வரையிலான காலங்களில் மட்டும் 2157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
2022 ல் மட்டும் இந்தியாவின் 100 ஆண்டு புராதன கல்வி நிலையங்களிலிருந்து 585 காப்புரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இது சராசரியாக மூன்று நாட்களுக்கு இரண்டு காப்புரிமை விண்ணப்பம் என்ற விகிதமாகும். கடந்த யு. பி. ஏ ஆட்சிக் காலத்தில் செயலற்று இருந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது திறம்பட செயலாற்றி வருகிறது. அதிகரித்து வரும் காப்புரிமைகளின் எண்ணிக்கை, ஐ.ஐ.எஸ்.சி.மேம்பட்டு வரும் நிலையை காட்டுகிறது. பேராசியரும், அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்ப உரிமங்கள் கண்காணிப்பு குழு தலைவருமான அனந்த கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:மத்திய அரசு காப்புரிமை வழங்கும் அலுவலகங்களை அதிகரித்து வருவதும், தற்போது காப்புரிமை வழங்கவதற்கான காலம் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் காப்புரிமை குறித்தவைகள் அதிகரித்திருப்பதும் மிகவும் பொருத்தமானது” என அவர் தெரிவித்தார்.