‘இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட வேண்டும்’ என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளதற்கு, ‘முதலில் பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு வாருங்கள்’ என, மத்திய அரசு தக்க பதிலளித்துள்ளது.
பயங்கரவாதத்தை விரும்பும் பாகிஸ்தான் இடையேயான அமைதியை விரும்பும் இந்திய உறவு சரியான நிலையில் இல்லை . இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துபாயில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் ஆழமான, ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட வேண்டும்’ என குறிப்பிட்டார். அதே வேளையில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை திரும்பப் பெற்றால்
மட்டுமே பேச்சுவார்த்தை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி. அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்ல ஆரோக்கியமான உறவு இருக்க வேண்டும் என்பதையே இந்தியாவும் விரும்புகிறது . ஆனால், அது பயங்கரவாதம் இல்லாத, வன்முறை இல்லாத சூழ்நிலையில் இருக்க வேண்டும்” என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.